சட்டம் அமுலுக்கு வருதற்கான வர்த்தமானி அறிவித்தலைத் தொடர்ந்து 2015 சனவரி 01 ஆந் திகதி முதல் ஏஈஆர்சீ தொழிற்படத் தொடங்கியது. அணுசக்தி அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எம். பிரினாத் டயஸ் அவர்கள் பேரவையின் தலைவராகவும் பேராசிரியர் ஆர். ஹேவமான்ன, பேராசியர் ரீ. ஆர். ஆரியரத்ன, காலம்சென்ற திருமதி சிரியங்கனி பர்ணாந்து மற்றும் திரு. காமினி கமகே ஆகியோர் பேரவையின் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படனர். பேரவையின் முதலாவது கூட்டம் 2015 சனவரி 02 இடம்பெற்றது.
10 விஞ்ஞான பதவியணியினர் மற்றும் 08 உதவி பதவியணியினருடன் ஏஈஆர்சீ தனது தொழிற்பாடுகளை ஆரம்பித்தது. மேலும் 26 விஞ்ஞான மற்றும் உதவி பதவியணியினர் தேவைப்படுகின்றனர். ஏஈஆர்சீ தற்போது தற்காலிகமாக களனியிலுள்ள அணுசக்தி சபையின் என்சீஎன்டீரீ கட்டிடத்தில் அமைந்துள்ளதுடன் எதிர்காலத்தில் நிரந்தரமான இடமொன்றிற்கு நகர்வதற்கான திட்டமுள்ளது.